மேயர் பிரகாஸின் ஏற்பாட்டில் மாத்தளை சென்தோமஸில் தடுப்பூசி.

(வி.ரி.சகாதேவராஜா)மாத்தளை மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவினரால் மாநகரிலுள்ள 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மாத்தளை நகரிலுள்ள சென்தோமஸ் கல்லூரியில் இத்தடுப்பூசி ஏற்றப்பட்டது.

60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏலவே ஏற்றப்பட்டு நிறைவடைந்த கையோடு
மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் மாநகரசபை வைத்திய அதிகாரி டாக்டர். அனுஷ வெலகெதர தலைமையிலான குழுவினர் இச்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்தருணம் மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் உறுப்பினர் த.மோகன் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் இச்செயற்றிட்டத்தை ஊக்குவித்துவருகின்றனர்.