சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இலங்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மரண சம்பவங்களும் அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இழப்புக்களையும், அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றனர்.

நாட்டில் நிலவும் கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையால் வாழ்வாதாரத்தை இழந்த சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) காலை மியன்டாட் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.எம். பாயிஸ் தலைமையில்  கழகத்தின் சமூக சேவைகள் பிரிவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக பிரதி தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்களாக மியன்டாட் விளையாட்டுக் கழக ஸ்தாபக மற்றும் மூத்த வீரர்கள், முக்கிய நிர்வாகிகள், கழக வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிவாரண பணியை முன்னெடுத்தனர்.