கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டமின்றி எளிய முறையில் உற்சவம்.

(படுவான்பாலகன்)
 கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்வசம் எளிய முறையில் இவ்வருடம் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

இவ்வாலய மகோற்சவம் எதிர்வரும் 08.09.2021ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27.09.2021ம் திகதி நிறைவுபெறவுள்ளது. தொடர்ச்சியாக உள்வீதி திருவிழா மாத்திரமே நடைபெறவுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டனர்.
கொவிட் 19 கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவேண்டும் என்பதனை வேண்டுதலாக கொண்டு பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்படவுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.
வெளிவீதி திருவிழா, தேரோட்டம், திருவேட்டை போன்ற விழாக்கள் நடைபெறமாட்டாது. மேலும் எந்தவொரு பக்தர்களுக்கும் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபடுவதற்கு அனுமதியில்லை. என ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்ததுடன், வீட்டில் இருந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.