தேவிலாமுனை வீதியில் லொறி மின்கம்பத்தில் மோதி விபத்து

(படுவான்பாலகன்)
கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதான வீதியில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று(04) காலை இடம்பெற்றுள்ளது.

காஞ்சிரங்குடா பகுதியில் இருந்து மணற்பிட்டி பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று மின்கம்பத்தில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது மின்கம்பமும் முறிந்து  லொறியில் வீழ்ந்துள்ளது.
லொறியினை செலுத்திச் சென்ற சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.