கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் சுகாதாரத்துறை : வீட்டுக்கு வீடு ஊசி போட களமிறங்கிய சுகாதாரக்குழு !! 

(நூருல் ஹுதா உமர் )

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமுலில் உள்ள இந்த காலகட்டத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, காரைதீவு போன்ற பிரதேசங்களை சேர்ந்த 60க்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு இரண்டாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று கடந்த சில தினங்களாக கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர்.