130 ரூபாவுக்கு சீனியை பெற நீண்ட வரிசையில் மக்கள் !

(நூருல் ஹுதா உமர்) நிந்தவூர், காரைதீவு  சாய்ந்தமருது போன்ற அம்பாறை மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்டுறவு கடைகளில் தற்போது 130 ரூபாவுக்கு சீனி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 130 ரூபாவுக்கு சீனியை கொள்வனவு செய்வதற்காக அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் முன்றலில் சுகாதார நடைமுறைகளை பேணி நீண்ட வரிசையில் காத்திருந்து சீனி கொள்வனவு செய்ததை காண முடிந்தது.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி மற்றும் கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி பிரதி ஆணையாளர் போன்றோரின் உதவியுடன் சாய்ந்தமருது ப. நோ. கூட்டுறவு சங்கத்திற்கு 1500 கிலோ சீனி கிடைக்கப்பெற்றது என சாய்ந்தமருது ப. நோ. கூட்டுறவு சங்கத்தலைவர்  ஏ.உதுமாலெப்பை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.