ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 1,187 உடல்கள் நல்லடக்கம்,மொத்த எண்ணிக்கை 2, 453 ஐ அடைந்துள்ளது.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா தொற்றினால் மரணமடைந்த நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் இம்மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை வரை 2,453 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடிக்கு தற்போது நாளொன்றுக்கு 40 க்கு மேற்பட்ட சடலங்கள் நல்லடக்கத்துக்கு வருவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் மரண வீதம் அதிகரித்து காணப்படுவதால் ஓகஸ்ட் மாதம் 1,187 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரம் மாத்திரம் 306 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு, கடந்த 23 ஆம் திகதி மாத்திரம் 57 உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதுவே நாளொன்றில் அதிகூடிய சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட நாளாக பதிவாகியுள்ளது.