கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் புதிய நடவடிக்கைகள்

(யாக்கூப் பஹாத்) நிந்தவூர் பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி இரண்டாம் அலகு ஏற்றுவதில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களை எதிர் கொண்டதை அடுத்து நேற்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் ஒன்று கூடிய நிந்தவூர் கொவிட் செயலணியும்இ அனர்த்த முகாமைத்துவ குழுவும் மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டன.

நிந்தவூர் பிரதேச சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பறூஸா நக்பர், பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமா சபையின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இன்றைய கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இடங்களாவன

சூகமுஃஇமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் 01,11,12 ஆகிய குறிச்சி களைச் சேர்ந்தவர்களுக்கும்

சூகமுஃஅல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் 14,1516,17,24,25 ஆகிய குறிச்சி களைச் சேர்ந்தவர்களுக்கும்

சூகமுஃஅறபா வித்தியாலயத்தில்
05, 06,07,18,19 ஆகிய குறிச்சி களைச் சேர்ந்தவர்களுக்கும்

சூகமுஃஇமாம் றூமி வித்தியாலயத்தில் 02,03,04,13 ஆகிய குறிச்சி களைச் சேர்ந்தவர்களுக்கும்

கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆதலால் பொது மக்கள் சமூக இடைவெளியைப் பேணி தங்களுக்குரிய தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் பொது மக்களை கேட்டுள்ளார்.