இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் மரணம்!

(அ . அச்சுதன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும், திருகோணமலை நகரசபை முன்னாள் உறுப்பினருமான
கோணாமலை சத்தியசீலராசா கொரோனா தொற்றினால் நேற்று (31) காலமானார்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் ,உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையானது தனது இரங்கலையும் துயர்பகிர்வினையும் தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் திருகோணமலை முக்கியஸ்தர் எமது செய்தியாளருக்கு தெரிவித்தார்.