சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலினால் கொரோனாவினை கட்டுப்படுத்தும் உத்தி ஆரம்பம்.

(நூருள் ஹுதா உமர்) சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும் கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தும் செயற்திட்டம் இன்று (01) புதன்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீமின் தலைமையில் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த செயற்திட்டத்தின் முதல் பதாகை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அமீன் றிசாத், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், அம்பாறை மாவட்ட உலமா சபை பிரதித்தலைவர் சட்டத்தரணி முஜீப், ராணுவப்படையணி உயரதிகாரி ரஞ்சன தேசப்பிரிய, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன், பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரி ஆர்.பி. அபயகோன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது பரவலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கோவிட் 19 பெரும் தொற்று குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறித்த பதாகைகள் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.