குழந்தைகளுக்கு பசுப்பாலை வழங்கலாமா?குழந்தைநல வைத்திய நிபுணர் டாக்டர் விஸ்ணு

உலக சுகாதார ஸ்தாபனமோ அல்லது இலங்கை சுகாதார அமைச்சோ குழந்தைகளுக்கு பசுப்பாலை வழங்கலாம் என இதுவரை எந்தவொரு சிபார்சும் செய்யவில்லைஎனவே தாய்மார்கள் ஒருவயது பூர்த்தியடையமுன் தங்கள் குழந்தைகளுக்கு பசுப்பாலை வழங்கக்கூடாது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியநிபுணரும் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளருமான டாக்டர் விஸ்ணு சிவபாதம் தெரிவித்தார்.

தற்போது குழந்தைகளுக்கான பால்மா தட்டுப்பாடுநிலவும் காலப்பகுியில் குிந்தைகளுக்கு பசுப்பால் வழங்கலாமென அவரிடம் விசாரித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தற்போது பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கு எப்போது பசுப்பால் வழங்கலாம் என கேள்விகேட்கின்றார்கள் என்னால் அவர்களுக்கு சொல்லக்கூடிய விடயம் இதுதான்.பசுப்பால் சிறந்த நிறை உணவு அதில் அதிகளவு புரதங்களும் கனியுப்புக்களும் இருக்கின்றது. பசுப்பாலை ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுடைய சிறுநீரகங்கள் ஊடாக கனியுப்புக்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதால் சிறுநீரகத்திற்கு மேலதிகமாக வேலைப்பழு ஏற்படும்.

அதேபோல் சிலவேளைகளில் குறைப்பிரவசமாக பிறக்கும் குழந்தைகளுக்கு பசுப்பால் கொடுப்பதனால் இன்னும் வேலைப்பழு சிறு நீரகங்களுக்கு ஏற்படும்.

பசுப்பாலில் காணப்படும் இரும்புச்சத்தின் அளவு குறைவு.இதனால் ஒரு குழந்தைக்கு பசுப்பாலை மட்டும்கொடுக்கும்போது குருதிச்சோகை நோய் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. அத்துடன் பசுப்பால் உட்கொள்ளும்போது சிலவேளைகளில் சிறுவர்களின் குடலிருந்து இரத்தம் வெளியேற வாய்ப்புண்டு.இவ்வாறு இரத்தம் வெளியேறும்போது குருதிச்சோகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

இலங்கையைப்பொறுத்தவரை கணிசமான தாய்மார்கள் முதல்ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றார்கள். இதனால் மூளைவளர்ச்சி உட்பட நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது. ஆறுமாதத்திற்குப்பின் தாய்ப்பாலுடன் மேலதிகமாக திண்ம ஆகாரங்களை வழங்கவேண்டும் என்றார்.