வாழைச்சேனையில் தூக்கில் தொங்கிய 13வயது சிறுமிக்கு கொவிட் தொற்று.

மட்டக்களப்பு  வாழைச்சேனை ஜீ.ரி.சற் வீட்டுத்தோட்டப்பகுதியில் தூக்கில் தொங்கி மரணமடைந்த 13வயதுச்சிறுமிக்கு கொரனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.வீட்டில் கையடக்க தொலைபேசி கேட்டதாகவும் வாங்கிக்கொடுக்க மறுத்தவேளையிலேயே  குறிப்பிட்ட சிறுமி தற்கொலை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போதே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.