கல்முனையில் கொரோனா விழிப்புணர்வு  பதாகை  திறப்பு 

(எம். என். எம். அப்ராஸ்)

கல்முனையில் கொரோனாவிழிப்புணர்வு பதாகைகள்திறத்து வைக்கப்பட்டது

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை பகுதியில்பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் தொடர்பில் விழிப்புட்டும் முகமாக கல்முனை கொரோனாதடுப்புசெயலனியின் ஏற்ப்பாட்டில்கொரோனா தொற்று பற்றிய அறிவுறுத்தல் அடங்கிய விழிப்புணர்வு பதாகை இன்று (27.8.2021) திறந்துவைக்கப்பட்டது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல்முன்றலில் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளி வாசல் அருகாமையில் குறித்த பாதாகை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏஅஸீஸ் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி , கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை வைத்தியசாலை அத்தியட்ச்சகர் ஏ. எல். எப். ரகுமான், 241வது இராணுவப்பிரிவின்கட்டளை அதிகாரி ,கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோன், வைத்தியர்களான ஏ. எல். பாறுக் , ஜெசிலுல் இலாஹி, கல்முனை தெற்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ. எம். பாறுக் உட்பட கல்முனை கொரோனா தடுப்புசெயலனி உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.