நீங்கள் வராவிட்டால் நாங்கள் வருவோம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை தடுப்பூசி வழங்கும் பாடசாலைகளில் பெற்றுக் கொள்ளும் படி ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை வேண்டி கொண்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வராத நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.