கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு பல மத்தியநிலையங்களில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 முதலாவது தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்று நிலையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.எம்.அல் அமீன் றிசாட் அறிவித்துள்ளார். தனது அறிக்கையில் மேலும், வொலிபேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதான வீதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, அல்-ஜலால் பாடசாலை முன்பாக அமைந்துள்ள கிளினிக் சென்டர் ஆகிய நிலையங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை  தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நிந்தவூர் பிரதேச கற்பிணித்தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான கொவிட் தடுப்பு மருந்தேற்றல்.காலை 8:00 முதல் பகல் 2:00 மணிவரை நிந்தவூர் மீராநகர் சுகாதார நிலையம், வெளவாலோடை சுகாதார நிலையம், அரசையடித்தோட்டம் சுகாதார நிலையம், அட்டப்பள்ளம் சுகாதார நிலையம் ஆகிய சுகாதார நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரையிலும் தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ளாதவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.