மட்டக்களப்பில் பிரதி அதிபர் கொரோனாவுக்கு பலி 

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் அறபா வித்தியாலய பிரதி அதிபர் அப்துல் ஜலீல் நேற்று (25) மரணமானார்.
கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரதி அதிபரின் ஜனாஸாவை ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் இதுவரை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் என மூவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.