மரக்கறி ஏற்றிய கெப் வாகனம் விபத்து.

(எப்.முபாரக்)நிலாவெளியில் இருந்து புல்மோட்டையை நோக்கி மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் ஒன்று சற்றுமுன்னர் நிலாவெளி 04ம் கட்டையில் சில்லு கழன்று விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று(25) இடம்பெற்றுள்ளது.

நிலாவெளி பொலிஸ் பிரிவூக்குபட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெப் வாகனத்தில் சாரதி காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.