கொக்கட்டிச்சோலையில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்பிட்டி பகுதியில் வைத்து கட்டுத்துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் ஒருவரை  கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்றைக்கு முன்தினம் (21) திகதி இரவு வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியினை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த கட்டுத்துப்பாக்கியுடன் அம்பிளாந்துரையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்த இராணுவத்தினர் மேலதிக விசாரனைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (22) குறித்த சந்தேகநபரை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.