திருகோணமலையில்  கொரோனா பாதுகாப்பு மேலங்கி வழங்கி வைப்பு

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், கிண்ணியா,மூதூர்,மற்றும் தம்பலாகாமம் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவிலுள்ள சுகாதார  உத்தியோகத்தர்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் கொரோனா பாதுகாப்பு மேலங்கி கையளிக்கும் நிகழ்வு இன்று(21) அந்தந்த பிரதேசங்களிலுள்ள பிராந்திய வைத்திய சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

சுகாதார உத்தியோகத்தர்காளின் நலன் கருதி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப் பெறும் நோக்கில் இவ் மேலங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய வைத்திய அத்தியட்சகர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவன அதிகாரிகளான ஏ.எம்.சலீம்,திரு நஜீம் மற்றும் எம்.ரமீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.