அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்றைய நிலை.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மக்கள் முழுமையாக அனுசரித்து வருகின்றனர்
நேற்று முன் தினம் இரவு 10 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் நேற்று ஸ்தம்பிதமடைந்தன
இதே வேளை வீதிகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமைகளை கண்காணித்து வருவதுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள போது அவசியமின்றி வெளியில் நடமாடுபவர்கள் குறித்து கண்காணித்து வருவதுடன் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கல்முனை சாய்ந்தமருதுஅக்கரைப்பற்று அட்டாளைச்சேனை  நிந்தவூர் காரைதீவு  சம்மாந்துறை பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் வீதிகள் பொது மக்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டன.