கந்தளாயில்ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர்  கைது 

எப்.முபாரக்  

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேரை இன்று(21) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், பேராறு,வட்டுக்கச்சி மற்றும் மத்ரஸா நகர் போன்ற பகுதிகளில் நேற்றிரவிலிருந்து(20) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கடைகளை திறந்து வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ள நிலையிலே பொலிஸாரினால் ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஹோட்டல்கள்,சில்லறைக் கடைகளை திறந்து வியாபாரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.