மட்டக்களப்பில் நீண்ட வரிசையில் வாகனங்கள்

ஏறாவூர் நிருபர் – நாஸர்)
அடுத்த பத்து நாட்களுக்கு நாட்டின் சகல பகுதிகளும்            முடக்கப்படும் அறிவிப்பு வெளியானதையடுத்து             மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும்        பொதுமக்கள் முன்டியடித்துக்கொண்டு அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்ததைக்காணமுடிந்தது.
இதனால் நகர புறங்களில் வாகனநெரிசல் ஏற்பட்டதை     அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்களில் நீண்டவரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டதை காணக்கிடைத்தது.
இதேபோன்று மளிகைக்டைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.
பொதுமக்கள்  அடுத்த வாரகாலத்திற்குத் தேவையான பொருட்களைக்கொள்வனவு செய்தனர்.
பெரும்பாலான பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைத்ததாக      மக்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் நாடுமுடக்கப்படுவதற்கு பொதுமக்கள்  ஆதரவு தெரிவித்தனர்.