சாப்பாட்டை வேண்டி உண்டபின் வண்டியை தாக்கிய யானை.

ஏ.பி.எம்.அஸ்ஹர் 
 புத்தளயிலிருந்து கதிர்காமம் செல்லும் B35 வீதியில்முச்சக்கர வண்டியில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் யானைக்கு உணவு வழங்கியிருக்கிறார் யானை உணவை எடுத்துவிட்டு அப்பயணி சென்ற  முச்சக்கரவண்டியினை தாக்கிய சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது .இப்பாதையில் செல்லும் பயணிகள் வீதிகளில் காணப்படும் யானைகளுக்கு உணவுப்பொதிகள் வழங்குவது வழமையாகும்.
அப்பொதிகளை  பெற்றுக்கொண்டதன் பின்னர் பயணிகளைச்செல்ல அனுமதிக்கும்
வழக்கமும் இங்குள்ள யானைகளுக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .இவ்வாறான சூழ் நிலையிலேயே இத்தாக்குதல் முயற்சி இடம் பெற்றுள்ளது
எனவே இவ் வீதியில் செல்லும் பயணிகள் அவதானமாகச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.