போலியான ஒரே  இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட கார்கள்  காத்தான்குடியில்  மீட்பு

ஜவ்பர்கான்–

போலியான   ஒரே இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட இரு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.இதில் ஒரு காரை காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் இன்று  கைப்பற்றியுள்ளனர்.

C P  CAI  .9272      .9272  . இலக்கங்கங்கள் பொறிக்கப்பட்ட காரையே காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் கைப்பற்றி காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த போலி இலக்கம் இரண்டு கார்களுக்கு பொறிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன் இதில்; ஒரு கார் காத்தான்குடியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றய கார் வேறு ஒரு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
குறித்த காரின் ஆவணங்கள் காரை வைத்திருந்த காத்தான்குடி நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணிசிறியின் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்இ மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.