காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2021/2022ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்  நேற்றைய தினம்  2021.08.15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை
07:30 மணிக்கு சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

நாட்டிலும் குறிப்பாக எமது மாவட்டத்திலும் அதி வீரியத்துடன் பரவி வரும் கொவிட் – 19 டெல்டா திரிபுடன்  கூடிய வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக குறித்த கூட்டத்தினை நடாத்துவதற்காக வேண்டி சுகாதாரத் தரப்பினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் வேண்டுகோளுக்கமைவாக கூட்ட பங்குபற்றுனரின் அதிக பட்ச எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சம்மேளன பதவி நிலை உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடும் ஏனைய பொதுச்சபை உறுப்பினர்களின் Zoom தொழில்நுட்ப இணைப்பினூடான பங்குபற்றுதலோடும் இடம் பெற்றது.
இதன்போது 2021/2022ஆம் புதிய நிர்வாக ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு.

1. தலைவர் மௌலவி MI. ஆதம் லெவ்வை பாலாஹி B.com (காத்தான்குடி 1 மீரா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் சார்பாக)

2. செயலாளர் அஷ்ஷெய்க். SMK முஹம்மத் (ஜாபிர்) நளீமி BA LLB (காத்தான்குடி  ஜம்மியத்துல் உலமா சார்பாக)

3. பொருளாளர் ஜனாப்.  AC. சபுவான் BBA (புதிய காத்தான்குடி 1 பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் சார்பாக)

4. ஆயுட்கால பிரதித் தலைவர் அல்ஹாஜ் AL. அப்துல் ஜவாத் BA. LLB

உப தலைவர்கள்.

5. அல்ஹாஜ். AMM. றவூப் JP. (முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி 3 சார்பாக)

6.அல்ஹாஜ் SHM. அன்ஸார் (நூறாணியா ஜூம்மா பள்ளிவாயல் புதிய காத்தான்குடி 6 சார்பாக)

7. அல்ஹாஜ் KLM. பரீட் JP. (பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி 3 சார்பாக)

8.ஜனாப். UM. அஸ்லம் SLAS (மினன் ஜூம்ஆப் பள்ளிவாயல் காங்கேயனோடை) (மண்முனைப்பற்று பள்ளிவாயல்கள் சார்பாக)

9.ஜனாப் YL. ஹபீப் லெப்பை (முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்) (மண்முனை வடக்கு பள்ளிவாயல்கள் சார்பாக)

10. உப பொருளாளர் அல்ஹாஜ். MIA . பஷீர் B.com (ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் சார்பாக)
தற்போதைய சூழ்நிலையில் பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான தெரிவு இடம் பெறாததன் காரணமாக கடந்த 2020/2021 ஆம் ஆண்டு நிர்வாக காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் குறித்த தெரிவு நடைபெறும் காலப்பகுதி வரை பதவி தாங்குனர்களாக செயற்படுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில்,
உப செயலாளர்

11. ஜனாப். A. J. அனீஸ் அஹ்மத் JP
உள்ளக கணக்காய்வாளர்கள்.

12. அல்ஹாஜ் KM. கலீல் JP (பிலால் எம்போரியம்)

13. மௌலவி அல்ஹாபிழ். S.H.M. ரமீஸ் ஜமாலி BA

14. ஜனாப் K.M.M. ஜெனிஸர் BSc

15. வெளியக க ணக்காய்வாளர் ஜனாப்
J.M. பிஸ்ருல் ஹாபி BSc