பேராசிரியர் வரகுணத்தின் நாமம் புதிய கட்டடத் தொகுதியில் பரிணமிக்கும்!

காரைதீவில் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்
கல்முனைப்பிராந்தியமெங்கும்  அதிரடி விஜயம்


கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் வியாழனன்று கொடிய கொவிட்டுக்க மத்தியில் கல்முனைப்பிராந்தியமெங்கும்  அதிரடி விஜயமொன்றை மேற்கொண்டு பல அபிவிருத்திட்டங்களை ஆரம்பிததுவைத்தார்.  திட்lமிடல் வைத்தியபணிப்பாளர் டாக்டர் எம்.மாஹிரும் உடனிருந்தார். இக்குழுவினர் காரைதீவு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திருக்கோவில் உல்லை ஆகிய பிரதேசங்களுக்க ஒரேநாளில் சென்று பல்வேறு வேலைத்தி;டங்களை ஆரம்பித்துவைத்தார்.
அதன் முதலங்கமாக காரைதீவுக்கு விஜயம் செய்தார்.

 
 
இலங்கை மத்தியஅரசின் விசேடநிதிஒதுக்கீட்டில் திறைசேரியூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையின்  புதிய நிருவாகக்கட்டடத்தொகுதி நிருமாணிக்கப்படவுள்ளது.

15மில்லியன் ருபா செலவில் நிருமாணிக்கப்படவிருக்கும் புதிய நிருவாகக்கட்டத்திற்கான அடிக்கல்நடும் வைபவம் நேற்றுமுன்தினம் (12) வியாழக்கிழமை  மாவட்ட வைத்தியஅதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை  ஆரம்பிப்பதற்கு ஆணிவேராகத்திகழ்ந்த பேராசிரியர் வரகுணம் என்றும் எம்மால் நினைவுகூரப்படவேண்டிய பெருந்தகை. அதுமட்டுமல்ல கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த காணியை அவர் இந்தக்காரைதீவு மண்ணுக்காக அள்பணிப்புச் செய்துள்ளார். அவர்  அன்பளிப்புச்செய்த காணியில் இப்புதிய மூன்றுமாடிக் கட்டடம் அமையவிருக்கிறது.இப்புதிய கட்டடத்தொகுதியில் ஒரு தொகுதி அவரது நாமத்தால் இலங்கவேண்டும்.அவரது உருவப்படம் பொறிக்கப்பட வேண்டும்.

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின்  புதிய நிருவாகக்கட்டடத்தொகுதிக்கான அடிக்கல்நடும் வைபவத்தில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றும்போதே கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்    மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை  ஆரம்பிப்பதற்கு ஆணிவேராகத்திகழ்ந்த பேராசிரியர் டாக்டர் வரகுணம் அன்பளிப்புச்செய்த காணியில் இப்புதிய மூன்றுமாடிக் கட்டடம் அமையவிருக்கிறது.
நிகழ்வில் பணிப்பாளர் சுகுணனனுடன் திட்டமிடல் வைத்தியஅதிகாரி டாக்டர் எம்.ஜ.மாஹிர் கட்டடத்திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி கே.அச்சுதன் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாகக்கலந்துகொண்டனர்.
சமயக்கிரியைகளை கண்ணகைஅம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நடாத்த அடிக்கற்கள் அதிதிகளால் நடப்பட்டது.

அங்கு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்  மேலும் உரையாற்றுகையில்:
பொதுவாக மக்களுக்கான ஒரு சேவை சரிவர நடைபெறவேண்டுமானால் அதற்கான பௌதீக வளம் மனிதவளம் என்பன வழங்கப்படவேண்டும்.   அதைவிட அதற்கான பொறிமுறை  அர்ப்பணிப்பு குழுச்செயற்பாடு என்பனவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்படவேண்டும். அது இன்று காரைதீவில் செயற்படஆரம்பித்துள்ளதில் மகிழ்ச்சி.

குறைந்த பௌதீகவளங்களுடன் நிறைந்த சேவையை காரைதீவு வைத்தியசாலை வழங்கிவருவதை நானறிவேன். புதிய வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் அருந்திரன் தலைமையிலான குழுவினரைப்பாராட்டுகிறேன்.
மத்தியஅரசின் விசேடநிதிஒதுக்கீட்டில் திறைசேரியூடாக ஒதுக்கப்பட்ட பணத்தில் இப்புதிய கட்டடம் நிருமாணிக்கப்படுகிறது.எனவே ஒப்பந்தகாரர் இப்பணியை பொறியியலாளர் அச்சுதனின் கண்காணிப்பில் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன் நிறைவுசெய்து தரவேண்டும்.
மேலும் இங்கு சகா சேர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்.அதற்கான நிபந்தனைகளை பூர்த்திசெய்தால் நானேமுன்னின்று அதனைசெய்துதரமுடியும். கட்டடத்தொகுதியை பூரணமாக முடிப்பதற்கும் முடிந்தஉதவிநல்கப்படும் என்றார்.

காரைதீவு மக்கள் சார்பில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் முன்னாள் உபசெயலாளரான உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விசேடஉரையாற்றினார். கல்முனைப்பிராந்தியத்தில் நீண்டகாலமாக பிரதேசவைத்தியசாலையாக இருக்கும் இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்படவேண்டும். இம்மூன்றுமாடிக்கட்டடத்தொகுதியின் மீதி நிருமாணப்பணிகளையும் பூர்த்தி செய்துதரவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

வைத்தியஅதிகாரி டாக்டர் சாந்தினி விவேகானந்தராஜா நன்றியுரை நிகழ்த்தினார்.

திருக்கோவிலில் 40படுக்கைகொண்ட கொவிட் நிலையம்!

இதேவேளை திருக்கோவில் பிரதேச மக்கள் கொவிட் தொற்றுக்கு ஆளாகின்ற நேரங்களில் அவர்களை தொலைவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய சிரமம் இதுவரை இருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போன்று  40 படுக்கை வசதி கொண்ட கொவிட் நோயாளர்களுக்கான புனரமைக்கப்பட்ட விடுதி ஒன்று வியாழனன்று திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது வைத்தியசாலைக்குரிய சத்திரசிகிச்சை கூடத்தின் வேலைகளும் அதற்குரிய உபகரணங்களுடன் தன்னியக்க மருத்துவ உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூட வசதியும் பிசியோதெரபிக்கான உபகரணங்களும் ஓரிரு மாதங்களுக்குள் வழங்கி வைக்கப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது.
மூவர் மட்டுமே பணியாற்றிய அந்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கை இன்று எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


உல்லை வைத்தியசாலை விஜயம்

அதேவேளை அருகம்பே என்ற பெயரில் உல்லாசத்துறை முகத்தையும் உல்லை என்ற பெயரில் ஏழை சமூகம் ஒன்றின் முகத்தையும் பிரதிபலிக்கின்ற எமது பிராந்தியத்தின் தென் முனையில் அமைந்துள்ள உல்லை ஆரம்ப சுகாதார சிகிச்சை பிரிவுக்கு கள விஜயம் ஒன்றை பணிப்பாளர் சுகுணன் மேற்கொண்டார்.
இன்று  மேற்கொண்டேன். இதன் போது மூன்று ல்லியன் ரூபாய்களை அந்த வைத்தியசாலையின் புனரமைப்புக்கும் சுற்றுமதில் கட்டுவதற்கும் ஒதுக்கீடு செய்ததுடன் அந்த ஆரம்ப சிகிச்சை பிரிவை தரம் உயர்த்தி பிரதேச வைத்தியசாலையாக மாற்றுவதற்குரிய சுகாதார அமைச்சிக்கு அனுப்பப்பட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரண்டினா நிறுவனமானது பல இடங்களிலும் நோயாளர்களின் சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கி வருவதன் தொடர்ச்சியாக  பிராந்தியத்தில் அக்கரைப்பற்று பிரதேச வைத்திய சாலையில் அமைந்துள்ள Covid-19 கான மையத்திற்கு 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்தது.