சீனாவில் தொடங்கிய கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று இலங்கைத்தீவுகுள்ளும் நுழைந்து எல்லா திசைகளிலும் பரவி தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருப்பதை தரவுகள் சான்றுபடுத்துகின்றன. இத்தருணத்தில் பல தரப்பினரும் கட்டுப்பாடுகளை விதித்து தொற்றினை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் மீது விடுத்து வருகின்றனர். ஆனாலும் அரசாங்கம் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்தவில்லையாயினும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இத்தருணத்தில் மக்களாக சுய கட்டுப்பாடுகளை விதித்து பெருமளவிலான உயிர் இழப்பினை தவிப்பதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் உள்ள ஏனைய மாவட்ட மக்களை விட முன்மாதிரியான மக்களாக மட்டக்களப்பு மக்கள் திகழ, தொற்று மிகவும் குறைந்த மாவட்டமாக இம்மாவட்டத்தினை இனங்காண்பிப்பதற்கு நாளையில் இருந்து இரு வாரங்களுக்காவது (15.08.2021திங்கள்) அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, ஏனைய தேவைகளுக்கு சுய பயணக்கட்டுப்பாடுகளை தங்களுக்குள் விதித்து செயற்படுவதற்கும், தேவையற்ற ஒன்றுகூடல்களையும் தவிர்ப்பதற்கும் முன்வர வேண்டும் என்பது பலரின் ஆதங்கம். இது தொடர்பிலான எழுச்சி சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
இதன் மூலமாக மரண ஓலத்தினை குறைக்க முடியும்.