மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உட்பட ஐவருக்கு கொரோனா!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாநகர சபையின்
ஆணையாளர் உட்பட மேலும் ஐவருக்கு இன்று (13) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த மூன்று தினங்களாக நோயாளர்கள்
இனங்காணப்பட்டுவரும் நிலையில்
மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ இன்றைய தினம்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உட்பட மாநகரசபையில் கடமையாற்றும் 05
பேர் கொரோனா நோயாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார
பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்குள்
மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உட்பட 08 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்
மொத்த எண்ணிக்கை 13 ஆக
அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார
பரிசோதகர்கள் தெரிவித்தனர்.