மலையக கல்விமான் வே.மாரிமுத்து காலமானார்

தலவாக்கலை பி.கேதீஸ்

நாவலப்பிட்டி கதிரேசன், புசல்லாவை சரஸ்வதி, நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் முன்னாள் வட்டார கல்வி அதிகாரியும்,மத்திய மாகாண தமிழ்க்கல்வி,இந்து கலாசார அமைச்சின் முன்னாள் இணைப்புச் செயலாளரும்,நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மத்திய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரும் மலையக கல்விமானுமான தி.வே.மாரிமுத்து உடல்நலக் குறைவால் (13.8.2021) வெள்ளிக்கிழமை இரவு கொட்டக்கலையில் காலமானார்.