கிரான் பிரதேசத்தில் போதைப்பொருள் சில்லறை வியாபாரி கைது.

(ந.குகதர்சன்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் வைத்து போதைப்பொருள் சில்லறை வியாபாரி ஒருவர் உட்பட இருவர் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஏறாவூர், மீராக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 19, 21 வயதுடைய இளைஞர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிசஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் போதைப்பொருளுடன் வசமாக மாட்டின் கொண்டுள்ளனர்.
இவர்கள் மிக நீண்ட நாட்களாக ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேசங்களில் போதைப்பொருள் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன்,
இன்றைய தினமும் வியாபார நோக்கில் போதைப்பொருளை வாழைச்சேனைப் பிரதேசத்துக்கு கடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்தோடு, போதைபொருளை கடத்தி வருவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா கோரத்தாண்டவத்திற்கு உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில் உயிரச்சுறுத்தலுக்கும் மத்தியில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் போதைப்பொருள் ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது.