கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்.

(ரக்ஸனா)

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் மக்கள் நல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பாலை நகர்இ 210 சீ தியாவட்டவான் கிராமத்தின் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செப்பணிடப்படு வருகின்றது.

இவ் வேலைத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் நடைபெறும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத்திட்டமாகும். இவ்வீதியின் நிர்மாணப் பணிக்காக 23.083 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மக்கள் இவ் வீதியினால் பயணம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இன்றைய வீதி அபிவிருத்தி பணிகளை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் பார்வையிட்ட அவர் வீதி அபிவிருத்தி பணிகள் குறிந்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதுடன் கொவிட் -19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நமது கிராமங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஜனாதிபதிக்கும்இ பிரதமருக்கும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் கிராம மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.