மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.

( துறையூர் சஞ்சயன் )
தேசத்துக்கோயிலென்றும் சின்னக் கதிர்காமம் என்றும் போற்றப்படும் தில்லை மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் நேற்று(02) திங்கட்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி, உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் தலைமையிலான மகாசபைக் கூட்டத்தினை தொடர்ந்து, சந்தண மண்டபத்தில் பூசை ஆராதனைகள் இடம்பெற்று கொக்கட்டி மரம் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதியுலா வலம் வருதலும் நடைபெற்றது.
பெரிய கப்புகனார் வே. விநாயகமூர்த்தி தலைமையில் பூசை ஆராதனைகள் நடைபெற்றதுடன், ஐம்பதுக்கு உட்பட்ட ஆலய அறங்காவலர் சபையினர் சுகாதார விதிமுறைகளுடன் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயத்தின் திருவிழா தொடர்ச்சியாக 20 நாட்கள் இடம்பெற்று, எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.