அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து தடை

க.கிஷாந்தன்)

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் இன்று (02) பிற்பகல் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரம் விழுந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்துவோர் கொட்டகலை முதல் போகாஹவத்தை வரையான மாற்று வீதியை தோட்ட பாதையின் ஊடாக பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதியின் நடுவே விழுந்த மரத்தில் பல பெரிய குளவி கூடுகள் கலைந்து காணப்படுகின்றது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளும், கொட்டகலை பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து வீழ்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.