வெளிநாடு செல்ல தேவைப்படும் தடுப்பூசி சான்றிதழ்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு கோரிக்கையின் பேரில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தடுப்பூசி அட்டை, கடவுச்சீட் மற்றும் தேவையான பிற ஆவணங்களை தனி நபர் சமர்ப்பித்தவுடன் சான்றிதழை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையினூடாக வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான ஹேமாந்த ஹேரத் இன்று குறிப்பிட்டார்.

அத்துடன் இது அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். குறித்த சான்றிதழ் கொவிட் தடுப்பூசி பெறப்பட்ட திகதி மற்றும் எந்த வகையான தடுப்பூசியை தனி நபர் பெற்றுள்ளார் என்பதை உறுதிபடுத்தும்.

இதேவேளை சில நாடுகள் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகளின் உள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.