மருதமுனையின் மூத்த கல்வி ஆளுமை  ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்கள் காலமானார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்;)
கிழக்கின் கல்விப் பரப்பிப்பில் மூத்த கல்வி ஆளுமை மருதமுனையைச் சேர்ந்த  ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமது(வயது 79)வியாழக்கிமை(29-07-2021)மாலை காலமானார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் வியாழன் மாலை மருதமுனை மையவாடியில் இடம் பெற்றது.

மருதமுனையின் கல்விப் பணியில் நீண்ட காலம் பயணித்த கல்வி ஆளுமை இவர்.41 வருட கல்விச் சேவையில் நாட்டின் பல பாகங்களில் கடமையாற்றி பல ஆளுமைகளை உருவாக்கிய கல்விமான் ஆவார்.இவரது இறுதிக்காலத்தில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை)வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டவர்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டு செயற்பட்டதுடன்,விளையாட்டுத் துறையிலும்,அறிவிப்புத் துறையிலும் அதிக அக்கறையுடன் ஆர்வமாகச் செயற்பட்டுள்ளார்.என்பதுதோடு சமூக மேம்பாட்டக்கும் அதிகம் பாடுபட்டுள்ளார்.
அதே போன்று சமயப்பணிகளிலும் அக்கறையோடு ஈடுபட்டு மத்ரஸாக்களை உருவாக்குவதிலும்,பள்ளிவாசல்களை உருவாக்கவுதிலும்; அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். சமூக சேவை அமைப்புக்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
அதே போன்று சுனாமிக்குப் பின்னர் மருதமுனையில் பிரஞ்சிட்டி வீட்டுத்திட்த்தை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனையைச் சேர்ந்த ஆதம்பாவா மரைக்கார் ,செமிலத்தும்மா தம்பதிக்கு 1942-02-10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.இவர் மருதமுனை ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்றார்.
(தற்போது மருதமுனை அல்மனார் மத்திய கல்லூ ரி,தேசிய பாடசாலை)1961ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று இறக்கக்கண்டி அரசினர் முஸ்லிம் தமிழ் சிங்கள கலவன் பாடசாலையில் 1962ஆம் வரை கடமையாற்றியுள்ளார்.
பின்னர் 1963ஆம் ஆண்டு குச்சவெளி மெதடிஸ் மிஸன் பாடசாலையில் கடமையாற்றி 1963ஆம் ஆண்;டு இறுதிப் பகுதில் சம்மாந்துறை மேற்கு அரசினர் முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று அங்கு கடமையாற்றினார்.
இறுதியாக மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில்ஆசிரியராகவும்,பிரதி அதிபராகவும்,பொறுப்பு அதிபராகவும் கடமையாற்றி அங்கிருந்து ஓய்வுபெற்றார்
ஏ.எம்.ஏ.சமது அதிபர் இவரது சேவைக்காலத்தில் தான் கடமையாற்றிய பாடசாலைகளில் பெற்ற அனுபவங்கள் புரிந்த சேவைகள் பற்றிய தகவல்களை அட்டாளைச்சேனை கலவியற் கல்ல}ரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல்“கல்விப்பணியில் ஏ.எம்.ஏ.சமது அதிபர்”என்ற பெயரில் 267 பக்கங்களைக் கொண்ட ஆவண நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏ.எம்.ஏ.சமது அதிபர் தொடர்பான இந்த நூல் வெளியீடும் அவருக்கான கௌரவிப்பும் கடந்த 2021-04-03ஆம் திகதி சனிக்கிழமை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.