(ஏறாவூர் நிருபர் நாஸர்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திலுள்ள ஐந்து இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 23 வாகனங்கள் மற்றும் அவற்றின் 23 சாரதிகளும் 24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துஷார ஹேமச்சந்திர தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரமின்றி வாவிக்குள் மணல் அகழ்வில் ஈடுபட்டமை மற்றும் ஏற்றிச்சென்றமை இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
கரடியனாறு பொலிஸார் மற்றும் அறந்தலாவ விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இச்சட்டவிரோத செற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸார் மற்றும் அறந்தலாவ விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இச்சட்டவிரோத செற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் இருபது உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 28 ஆந்திதிகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தன் குமாரவெளி வாவியில் மணல் அகழ்ந்த பத்து உழவு இயந்திரங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
முந்தன் குமாரவெளி வாவியில் மணல் அகழ்ந்த பத்து உழவு இயந்திரங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை கொஸ்கொல்ல, ஈரளக்குளம், மரப்பாலம் மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற 23 உழவு இயந்திரங்களை கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.