முடக்கப்பட்டது கதிர்காமம்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் கந்தனாலய ஆடிவேல்விழா உற்சவம் தினசரி பெரஹரா திருவிழாக்களுடன் நடைபெற்றுவருகின்றது.

கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா மற்றும் பெரஹரா இநேற்று 10வது நாளைத்தாண்டி சுகாதாரநடைமுறைகளுடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இதேவேளை கதிர்காமத்தில் இடம்பெற்ற எசல பெரஹராவில் கலந்து கொண்ட நடன குழுவில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரஹரா முடிந்து காலி குருபீடம் ஒன்றில் தங்கி இருந்த 11 பேருக்கும் இமாத்தறை பௌத்த சங்கத்தில் தங்கி இருந்த 4 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கதிர்காமம் நகர் உட்பட மூன்று பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி உற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறையவடையவிருக்கிறது.