ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதேசங்களில் கொரோனா அலை வெகுவாக பரவிவரும் இந்த சூழ்நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (19) அக்கறைப்பற்று பிரதேச சுகாதரா வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

கிழக்கில் கோவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அதிக பட்ச சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன்  ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை பிராந்திய பொதுமக்கள் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கறைப்பற்று பிரதேச சபை  தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கறைபற்று ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.