ஆசிரியரிடம் பிரம்பு கொடுத்த குரங்கு!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பாடசாலை வளாகத்தில் நின்ற ஆசிரியர் ஒருவரிடம் குரங்கு ஒன்று பிரம்பை வழங்கிச் சென்ற சுவாரஸ்ய சம்பவமொன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இணையவழி கற்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதனை ஆசிரியர் ஒருவர் கண்காணித்துக் கொண்டு நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த குரங்குக் கூட்டத்தில் ஒரு குரங்கு மேல்மாடியில் இருந்து பிரம்பு ஒன்றை ஆசிரியரிடம் போட்ட சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் மனிதர்களைக் கண்டதும் சேட்டைகள் செய்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.