கந்தளாயில் சிப்தோரா உதவித் தொகை வழங்கி வைப்பு.

(இஃஜாஸ் ஏ பரீட்) சமுர்தி மேம்பாட்டு வங்கியால் செயல்படுத்தப்பட்ட ‘சமுர்தி சிப்தோரா’ உதவித்தொகை திட்டத்தின் கீழ் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்து க.பொ.த. உயர்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சமுர்தி பெறுநர்களுக்கு மாதாந்தம் ரூபா 1500  உதவித்தொகை வழங்கும் திட்டம் கந்தளாய் பிரதேச செயலகத்தில் நேற்று (13) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரளவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் 50 மாணவர்களுக்கு அடையாள உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகத்தின் சமுர்தி மேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.