தமிழர் நிலம் கபளீகரம் செய்யப்படுவதனை அனுமதியோம்

பாறுக் ஷிஹான்

வீதி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலம் கபளீகரம் செய்யப்படுவதனை அனுமதியோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியனி; அம்பாறை இளைஞர் அணி தலைவர் புஸ்பராஜ் துசானந்தன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவுக் கிராமத்தின் இருப்பைக் கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட் வீதியை உடனடியாக ஊடகங்களுக்கு இன்று(13) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

வீதி அபிவிருத்தி என்னும் பெயரால் தமிழ் மக்களின் வயல் நிலங்கள் விவசாய நிலங்கைள கபளீகரம் செய்யும் நோக்கில் மாவடிப்பள்ளி தொடக்கம் – சாய்ந்தமருது வரையான வயல் கட்டுபாதை அவசர அவசரமாக காப்பற் பாதையாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. இவ்வீதி சாய்ந்தமருதுடன் நிற்காமல் தொடர்ந்து கல்முனை பஸ்தரிப்பு நிலையம் வரை நீடிக்கப்படும் எனவும் அறிய முடிகிறது.

நீண்ட காலமாக சகோதர இஸ்லாமிய மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பகைமையை வளர்க்கும் நோக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் செயற்பட்டுவந்துள்ளார்கள். மீண்டும் தாங்களின் வங்குரோத்து அரசியல் நோக்கங்களுக்காக  துரோகம் இழைக்கும் முஸலீம் அரசியல் வாதிகளின் வெக்கம்கெட்ட செயற்பாட்டினால் மீண்டும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையில் பகைமையை வளர்க்கும் நோக்கில் அவர்களால் இத்திட்டம் நகர்த்தப்படுகின்றதாகவே இதை நாம் பார்க்கிறோம்.
1980களில் தமிழர் பெரும்பாண்மையாகவும் மிக சொற்ப அளவில் சிங்களவர்களையும் கொண்டதாகவும் எமது கல்முனை நகர் காணப்பட்டது. எனினும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு யுத்த காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் அகதிகளாக விரட்டப்பட்டும் வன்செயல்களால்பாதிக்கப்பட்ட தமிழர் பொருளாதார ரீதியிலும் வலுவிழந்து காணப்பட்ட சந்தர்த்தை பயன்படுத்தி  கல்முனை நகர மத்தி வர்த்தக நிலையங்களையும் கைப்பற்றி  அண்டை கிராமங்களான கல்முனைக்குடி சாய்ந்தமருதில் இருந்த தமிழர் சொத்துகளையும் எரியூட்டி நயவஞ்சகமாகவும் பலாத்காரமாகவும் கைப்பற்றினார்கள் என்பது யாவரும் அறிந்ததே. சிறிய உதாரணம் அப்போது தமிழ் கலவன் பாடசாலையாக் இருந்த பாடசாலையானது பின்நாட்க்களில் ஸாகிரா கல்லூரியாக மாற்றம் பெற்;றமையை குறிப்பிடலாம். இப்போது  கல்முனைக்குடி என்ற ஊர் கூட இல்லாமல் சாய்ந்தமருது என்றும் மீதம் கல்முனை என்றும் எஞ்சி நிற்கின்றது.
முஸ்லிம்கள் கரையோர மாவட்டம் என்ற கோட்பாட்டில் கல்முனையை அதன் தலைநகராக அவர்கள் சித்தரிப்பதால். கல்முனை அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் தமிழர்களது நிலங்களை கபளீகரம் செய்து தமிழர்களை வெளியேற்றிஇ திட்டமிட்ட குடியேற்றங்களை செய்தும் தமிழரது விகிதாசாரத்தை குறைக்கும் திட்டம் ஒன்று இங்கே திரை மறைவில் முன்னெடுக்கப்படுவது பலரும் அறிந்ததே அந்த திட்டத்தின் ஒரு பாகம் தான் இந்த வீதி அபிவிருத்தி திட்டம் வயல் கட்டுபாதையை காப்பெற் பாதையாக்கி அதனைச் சூழ அப்பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் வயற் காணிகளையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி  சுவீகரித்து தொடர் மாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமிழர் விகிதாசார்தைதை இன்னும் குறைப்பது அவர்கள்  பலநாள் கனவுகளில் ஒன்றுஇ ஆக  இப்பொழுது அதை அவர்கள் நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள் எனவும் புலனாகுகிறது.
உரிய நேரத்தில் இதை நாங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் கல்முனையில் தமிழர் இருப்பை சுத்தமாக துடைத்து எறிந்து விடுவார்கள்.கடந்த சுனாமி அனர்த்தித்தின் போதுஇ தமிழ் செல்வந்தர் ஒருவரது பூரண நிதியுதவியின் மூலம்  கல்முனை மக்களுக்கு என கட்டப்பட்ட மீள் குடியேற்ற வீட்டு தொகுதிகளை அப்போது வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த முஸலிம் அரசியல்வாதியினால் ஒரே இரவில் வெளியூர்  முஸ்லிம்களைக்  கொண்டு குடியேற்றப்பட்டார்கள். அதன் மூலம் இன வீதாசாரம் மாற்றப்பட்டு காலப்போக்கில் கல்முனை நகர மத்தியில்  கிறவல் குழிஇ தேக்கம்சோலை  ஆகியவை தற்போதய இஸ்லாமாபாத் ஆக்கப்பட்டுள்ளது  கல்முனை வடக்கு பிரதேச   செயலகத்திற்க்கு உரிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த விடாமல்  இருப்பதற்க்கு இதுவும்  ஒரு காரணமாக இருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆகவே எம் கல்முனை தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாக்கும் பொருட்டு தமிழர் நிலங்கை கபளீகரம் செய்யும் நோக்கில் அபிவிருத்தி என்னும் போர்வையில் இடம்பெறும் இந்நிகழ்வை வன்மையாக கண்டிப்பதுடன்  இது போன்ற செயற்பாடுகள் தொடருமானால்  எம் மக்கள்  மற்றும் பொது அமைப்புக்ளுடன்  வீதிக்கு இறங்கி ஜனநாயக ரீதியாகப் போராடும் நிலமைகளும் ஏற்படலாம்  என்பதனை பதிவு செய்கிறேன் என்றார்.