மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்புக்களால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு

????????????????????????????????????

(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொரிவு செய்யப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்திச் சங்கம் ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புற்றுநோய் உதவி சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து செவ்வாய்கிழமை (13ம் திகதி) வழங்கிவைத்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களையும் வைத்திய துறை சார்ந்த சுகாதார சேவையாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் மேற்படி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாவற்காடு, கரடியனாறு, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து  பணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திற்காக ஒரு  தொகுதி கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது மொத்தமாக சுமார் 12 இலட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதியான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக வட்ஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.

இவ் இருவேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி கணேசலிங்கம், வட்ஸ் அமைப்பின் தலைவர் முத்துலிங்கம், பொருளாளர் தணிகாசலம்,  வைத்தியர் மயூரதன் மற்றும் கணக்காளர்கள் வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

????????????????????????????????????