திருகோணமலையில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் பலி.

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் டைனமைட் வெடித்ததில் நபரொருவர் இன்று (07) பிற்பகல் 12.40 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர் (26வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-டைனமைட் என்றழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது  டைனமைட் வெடித்ததில் குறித்த மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர.
 குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.