தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்  (வீடியோ இணைப்பு)

பிரசித்திபெற்றதும் தொன்மை வாய்ந்ததும் “சின்னக் கதிர்காமம்” என சிறப்பித்துக் கூறப்படுவதுமாகிய தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இடம்பெற்றது. தொடர்ந்து 21 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 25ஆம் திகதி புண்ணிய தீர்த்தோற்சவ நிகழ்வுடன் இனிதே நிறைவடையவுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினைக் கருத்தில்கொண்டு நிருவாக சபை, ஆலய பணிகளோடு தொடர்புடைய நபர்களென மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு நாட்டின் பலபாகங்களிலுமிருந்தும் பல இலட்சம் அடியார்கள் வருகை தருவது வழமை. எவ்வாறிருப்பினும் இந்த வருடமும் சென்ற வருடமும் கொவிட் சூழ்நிலை காரணமாக அடியார்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.