எனது முயற்சிக்கு முட்டுக் கொடுங்கள் முன்னாள் போராளி

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
எனது முயற்சிக்கு முட்டுக் கொடுங்கள் போரில் ஒரு காலையிழந்த முன்னாள் போராளி கோரிக்கை.
-கொரோனா என் பொருளாதாரத்தை நசிக்கிவிட்டது-

நான் யுத்தம் காரணமாக ஒரு காலையிழந்து இலங்கை அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தற்போது அம்பாரை பொத்துவில் பிரதேசத்தில் குண்டுமடு கிராமத்தில் சுயதொழில் முயற்சியினால் எனது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றேன் எனது முயற்சிக்கு முட்டு கொடுங்கள் என  52வயதான முன்னாள் போராளி பூபாலபிள்ளை தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் அரசினால் 2012ஆண்டு வெலிக்கந்தை புதிய சேனபுர முகாமில் புனர்வாழ் அளிக்கப்பட்டு பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தனது மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் பொத்துவில் 09 குண்டுமடு கிராமத்தில் வசித்து வருவதுடன் சிரட்டைக் கைபொருள் உற்பத்திகளை விற்பனை செய்வதன் ஊடாக தனது வாழ்க்கையினை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக பொத்துவில் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் வராது வெறிச்சோடி இருப்பதன் காரணமாக தனது சிரட்டைக் கைப்பணிப் பொருட்களின் விற்பனையும் விழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலைமை காரணமாக எனது பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளதுடன் போரில் ஒரு காலையிழந்த நிலையிலும் தொற்றா நோய் காரணமாகவும்  வேறு ஒரு தொழிழுக்கும் செல்ல முடியாது நான் மிகவும் பொருளாதார ரீதியாகவும் உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளளேன்.

எனது நிலைமைகளை கவனத்தில் கொண்டு எனது சுயதொழிலை மேலும் வலுப்படுத்தும் வகையில் நவின கருவிகளை பொற்றுக் கொள்வதற்கும் அதனை விற்பனை செய்வதற்கான ஒரு நிலையத்தினை அமைத்துக் கொள்ளும் பொருட்டும் எனக்கு உதவி புரியுமாறு இலங்கை அரசிடமும் புலம்பேர் தமிழ் சமூகத்திடம் கோருவதாத முன்னாள் போராளி பூபாலப்பிள்ளை தங்கமணி வேண்டி நிற்கின்றார்.