கொரோனா சூழ்நிலையில் நல்லாட்சிக்காரர்களிடம் ஆட்சி இருந்திருந்தால் மக்களை பட்டினி போட்டு சாகடித்திருப்பார்கள் : அஸ்வான் எஸ் மெளலானா

நூருல் ஹுதா உமர்.

இலங்கையில் அண்மைய நாட்களில் அதிகரித்து காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டு மக்களை பாதுகாத்து வரும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பாராட்ட வேண்டும். இந்த மக்கள் பணியை முடக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்கட்சியினர் தவறான முறையில் வெளிப்படுத்தி அபாண்டமான கருத்துக்களை தொடர்ந்தும் கூறி வருகின்றார்கள் என  மருதம் கலைக்கூடல் தலைவரும் பிரபல கலைஞருமான அஸ்வான் எஸ் மெளலானா தெரிவித்தார்.

மருதம் கலைமன்ற இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எமது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை முற்று முழுவதுமாக கட்டுபாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது. கொறோனா தொற்று அடையாளம் காணப்படும் இடங்களில் .தனிமைப்படுத்தளுக்காக அப்பிரதேசம் முடக்கப்படும். அது மட்டுமின்றி அந்த பிரதேசங்களில் கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கபடுகிறது.

இந்த பெருந்தொற்று காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் சுழற்சி முறையில் வேலைக்கு பணியாளர்களை  அமத்துதல், கொரொனா தொற்றாளர்களை முழுமையாக சிகிச்சை பெற்று சுகாதார நடவடிக்கையின் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்புகிறார்கள் இதை சகித்து கொள்ள முடியாமல் அரசாங்கத்தை குற்றம் சொல்லி குளிர் காய எதிரணியினர் நினைக்கின்றார்கள். கடந்த 4 1/2 வருடம் ஆட்சி புரிந்து நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டு மீண்டும் நாட்டை எங்களிடத்தில் தாருங்கள் என்று கேட்கின்றார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களிடத்தில் ஆட்சி இருந்தால் மக்களை பட்டினி போட்டு சாகடித்திருப்பார்கள். இந்த அரசு சூடு பிடித்த கொரொனா காலத்திலும் கூட அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது என்றால் நாம் அரசுவை பாராட்ட வேண்டும் என்றார்