மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சேதன பசளை உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம்.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சேதன பசளை உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம்.

நாட்டை கட்டியெழுப்பு சுபிட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சேதன பசளை உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு சேத்துக்குடா கிராம சேவையாளர் பிரிவில் உள்ள இயற்கை முறையிலான கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் ஜி.பிரியவரதனால் முன்னெடுக்கின்ற சேதனை பசளை உற்பத்தி மற்றும் சேதனைபசளை கரசல் நீர் உற்பத்தி செய்முறையினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை(02) நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர்.