காத்தான்குடி தபாலகம் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

ஜவ்பர்கான்–மட்டக்களப்பு
காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள  மேற் கொள்ளப்பட்டன இதில் மற்;று மொரு ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் மேலும் ஒரு ஊழியருக்கு நேற்று (2) வெள்ளிக்கிழமை கொரொனோ தொற்று
உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எதிர் வரும் 14 நாட்களுக்கு காத்தான்குடி தபாலகத்தை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதையடுத்து தபாலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டதில் மூவருக்கு கொரோனா தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே காத்தான்குடி தபாலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.