திராய்மடுவில் இ.கி.மிசன் உலருணவு விநியோகம்!

(வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநிலக்கிளை கொடிய கொரோனாவால் வாழ்வாதாரத்தையிழந்த திராய்மடு கிராமத்தைச்ச்சேர்ந்த 80குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலருணவு நிவாரணங்களை வழங்கிவைத்தது.

மட்டு.இ.கி.மிசன் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ அவற்றை மக்களுக்கு வழங்கிவைத்தார்.மட்டு.இ.கி.மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ வழிகாட்டலில் இவ்வுலருணவு விநியோகம் இடம்பெற்றது.

ஏழைகளுக்கும் இநலிவுற்றோருக்கும் இரங்குவது மானிடநேயமாகும் என்ற வாக்கிற்கிணங்க சமகால பேரிடர் காலத்தில் இ.கி.மிசன் நாடளாவியரீதியில் பல பிரதேசங்களுக்கும் சென்று இத்தகைய உலருணவுப்பொதிகளை மக்களுக்கு வழங்கிவருகிறது.

இதேவேளை நேற்றுமுன்தினம் அம்பாறை மாவட்டத்திலும் 4பிரதேசங்களில் 7லட்சருபா பெறுமதியான 600உலருணவுப்பொதிகளை சுவாமி தக்ஷஜானந்தா ஜீ வழங்கிவைத்தமை தெரிந்ததே.