ஜெஸ்வர் உமர் இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு.

(எஸ்.அஷ்ரப்கான்) ஜெஸ்வர் உமர் இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) இடம்பெற்ற தேர்தலில் ஜெஸ்வர் 96 வாக்குககளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோவின் மகன் டாக்டர் மானில் பெர்னாண்டோ 90 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஜெஸ்வர் இலங்கையிலும் வெளிநாட்டிலும் பல்வேறு உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர்.

இவர் இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தில் பல நிர்வாகப் பதவிகளை வகித்து வந்திருக்கிறார்.

இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் சர்வதேச உதைபந்தாட்டச் சங்கமான (FIFA)வின் சிரேஷ்ட ஆட்ட நடுவராகவும் (Senior Match Referee) இருந்தவர் என்பதுடன்இ ஆசிய உதைபந்தாட்டச் சங்கத்தில் (AFC) Match Commissioner  ஆகவும் பதவி வகித்தார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் உமர்லெப்பை என்பவரின் மகனான ஜெஸ்வர், அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஜெஸ்வர் கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இந்த தலைவர் பதவியாகும்.

வின் சிரேஷ்ட ஆட்ட நடுவராகவும் இருந்தவர் என்பதுடன், ஆசிய உதைபந்தாட்டச் சங்கத்தில் ஆகவும் பதவி வகித்தார்.